உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Posts Tagged ‘Enroll’

புரட்சி செய்ய வாருங்கள்

Posted by யாதவர் பேரவை on August 6, 2009

வணக்கம் சொந்தங்களே..

தமிழகத்தின் எழலரைகொடி மக்கள்தொகையில் அங்கொன்றும் இந்தோன்றுமாய் கிட்டதட்ட ஒருகோடி மக்களை கொண்டிருந்தாலும், எம்மக்களுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து உரிமைகளும் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது ஒரு வேதனைக்குரிய விஷயம் தான். ஆண்டாண்டு காலமாக இத்தமிழ்த்திருநாட்டில் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும், நாம் கண்நிருந்தும் குருடனாய், வாயிருந்தும் ஊமையாய் வாழ்வை உருட்டிக்கொண்டு இருக்கிறோம்.. படிப்பில்,வேலையில் என் பள்ளி தோழனும் எனது பக்கத்துக்கு ஊராரும் வளர்ச்சி பாதையில் செல்ல கிடைத்ததே ஒரு வாய்ப்பு” அது ஏன் என் சொந்தபந்தகளுக்கு இது நாள்வரை கிட்ட வில்லை..!அரசியல் சதுரங்கத்தில் நாய்களும் நரிகளும் மாறிமாறி ஆட்சிபுரிய ஏணிப்படிகளாய் இருந்துவருகிரோமே இழிச்சவாயந்தனமாய் இந்த நிலைக்கு காரணம் யார்..? ஏன்..? தலைவன் என்ற போர்வையில் உட்கார்ந்து தேர்தலின் போதெல்லாம் இந்த நாய்களும் நரிகளும் போடும் எச்சில் எலும்புத்துண்டுக்கும்,கத்தை கத்தையாய் இறைக்கும் பணத்திற்கும் எங்கள் இனத்தையே விலைபேசும் துரோகிகள் யார் யார்..? மெத்தபடித்த மேதாவி போல, ஊரார் டவுசரில் உள்ள ஓட்டையை பார்க்கும் என் இன சகோதரனுக்கு அவன் டவுசரில் உள்ள ஓட்டை தெரியாமல் போனது ஏனோ..? இவனுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..பெங்களூர்ல நல்ல வேல.. கை நிறைய சம்பளம்.. நீ பாட்டுக்கு வேலைய பாத்துட்டு போவியான்னு எகத்தாலசிரிப்பில் ஏளனமாக பார்க்கும் ஒரு சில இன்றைய மனிதர்கள் இல்லை மன்னிக்கவும் பிழைக்கத்தெரிந்தவர்கள் மத்தியில் எனக்காகவும், நம்சொந்தங்களுக்காகவும் சிந்திக்கும் சில அற்ப மனிதர்களில் அதாவது பிழைக்கதெரியாதவனில் நானும் ஒரு யாதவன்..! எங்கோ எவனோ ஒரு ரயில்வே மந்திரியானால் என்னவோ இவனுடைய மச்சான் மந்திரியான மாதிரி சந்தோஷத்தில் குதிச்சானே என் ரத்தம்.. இதுநாள் வரையில் அவனோ இல்லை நம்மில் யாராவது ஒருத்தருக்கு ஒரு குண்டூசி அளவு, ஏதோ பேசிக்கொண்டுஇருக்கிரோமே அந்த “வாய்ப்பு’ அது வேலையிலோ அல்லது படிப்பிலோ கிடைத்ததா..? உண்மையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆரியர்களுடன் ஒற்றுமையாக கூடி சம்பந்தம் பண்ற அளவு உறவுகொண்டாடி வருகிறோமே ஒரு புதுப்பெயருடன் அதனால் நாம் அடைந்த பயன் தான் என்ன..? (யாரு அந்த செவத்த தோல்காரன் அவன் பொண்ண நம்மில் மணமுடிக்க தயாரா இருக்குறது..இல்லை நாம் தான் பெண்ணஐக் கொடுப்போமா..!) சரி இனிமேல் அடையப்போகும் பயன் தான் என்ன..? ஒரு புடலங்கா

ஒரு புடலங்காயும் கிடையாது..! அப்புறம் என்ன பெரிய உறவு..! உனக்கு வயிதுவலினா நீ தானே மருந்துண்ண வேண்டும்.. நீ நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் நீதான் தண்ணீருக்குள் குதிக்க வேண்டும்.. எவனாவது நீச்சல் தெரிஞ்சவர் கையா புடிச்சிகிட்டு நடந்தா நீச்சல் கத்துக்கலாம்னு நினைச்சா அதுதான் மிகப்பெரிய தவறு..! ஒரு சிறிய உதாரணத்திற்கு இன்று தமிழக அரசின் கடும் எதிர்பிற்கு பிறகும் கள் இறக்கும் போராட்டம் நடப்பது எதற்கு.. இன்னும் சிலநாட்களில் அல்லது மாதங்களில் அவர்களுடைய போராட்டதிற்கு அரசு நிபந்தனயுடனாவது செவி சாய்க்கும் என்பதுதான்.. அது எல்லோரும் அறிந்த ஒருசெயல்.. இதேபோலத்தான் பயிற்சி மருத்துவர்களின் போராட்டமும்..! ஆனால் நாம் நியமாக பெற்றிருக்க வேண்டிய மிகவும்பிற்படுதபட்டவர் பட்டியல் இன்னும் கிடப்பிலேயே உள்ளது.. அப்பபோ நாம் பலகொஷ்டிகளாக நடத்தும் நம்முடைய போராட்டங்களும் கோரிக்கைகளும் அரசுக்கு கேலிக்கூத்தாகவே அமைகிறது..! இதற்க்கு விடிவு என்றோ அன்றுதான் நாம் நம்முடைய அடையாளத்தை வெளிக்கொணர முடியும், இதற்கு எந்த தேசியத்தையும், தேசியக்கட்சியையும் நம்பி வெட்டிகதை பேசி வீன்போவதை விட நாமாகவே தனியாக ஓர் அணியின் கீழ் நின்று வெற்றிபெறலாம்..! அழுகின்ற குழந்தைக்குதான் பால்கிடைக்கும் என்பது போல் தட்டினால் தான் கதவு திறக்கப்படும் சகோதரா..! இந்த ஈன பிறப்பெடுத்த இடைச்சி மக்களுக்கு இனியாவது விடிவு காலம் பிறக்கட்டும்..அது, குழுமத்தில் இணைத்திருக்கும் எம்குல மக்களே உங்களால் தான் அந்த விடிவுகாலம் பிறக்கும்.. இது எழுத படாத ஒரு விதி..! இன்றும், நாம் மௌனமாக இருந்தால் நாளைய நமது பிள்ளைகளும் ஒரு பெருந் கூட்டத்தின் மேலாதிக்கத்தில் அடிமைகளாக கூநிநிர்க்க வேண்டிவரும்.. பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் விட்டு சென்ற அதே பிழையை நாமும் தொடராமல்..வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான விடியலை தேடி முயற்சிகள் எடுப்போம்..கை கோர்த்து நடப்போம்..!சிந்திக்க செயல்படுக..!இப்படிக்கு.. பலநூறு ஆண்டுகளுக்கு முன் எம்குலத்தொழில் மேய்ச்சலின் போது பிரிந்து சென்ற எம்சொந்தகளுக்காக..பிரிவுடன் வாழும் உங்களின் சொந்தம்..!
காலத்தின் கோலத்தில், கணினியின் மாற்றத்தில் உலகெங்கிலும் பிரிந்து கிடக்கும் எம்மக்களை எம் சொந்தங்களை ஓர் அணியில் கோர்த்து, சுவரில்லாத மாய அரங்கத்தில், இந்த இணையத்தில் எம்மைஎல்லாம் இணைத்துவைக்க இடம்தந்துள்ளது ஓர்குட்..சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னாள், அதாவது 90களில் நம்மால் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு, பிரமிக்க வைத்த ஒரு செயல்தான் நமது இணையம். இன்றும், இன்னும், எத்தனையோ அதிசயங்களை இணையம் நம் வாசலில் வைத்துள்ளது.. இன்றைய பொழுதில் இதை விட ஒரு பெரிய பரந்த அரங்கம் நம்மால் என்னிகூட பார்க்க இயலாது.. அப்படியே ஒரு பெரிய அரங்கத்தில் இருந்தாலும் நாம் இந்த அளவிற்கு பொறுமையாக கலந்துரையாடிஇருப்போமா என்பது ஒரு கேள்வி குறியே..? வேண்டுமானால் நாம் தற்சமயம் Free Blocks என்று சொல்லக்கூடிய குறும் பக்கங்களை நமக்காக உருவாக்கிகொள்ளலாம்.. நாளடைவில் ஒரு வலைத்தளத்தை வடிவமைத்து கொள்வோம்.. என்னை பொருத்தவரையில் நாம் சென்னையை மய்யமாக செயல்படுவது தான் சாத்தியமாக படுகிறது.. இயக்கத்தின் பெயரை பதிவுசெய்ய தற்சமயம் ஒரு முகவரி தேவை.. இதற்க்கு நமது உறுப்பினர்கள், சென்னையை சேர்த்தவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நன்று.. இயக்கத்தின் பதிவு சான்றைவைத்து தான், வங்கியில் இயக்கத்தின் சேமிப்பு கணக்கை துவக்கமுடியும்.. மேலும் நாம் அமைக்கவிருக்கும் இயக்கம் எந்த ஒரு தனிநபராலும் சாதிக்கமுடியாத, சாத்தியப்படாத ஒன்று.. இதில் இன்று நமது அரங்கத்தில் கூடிஇருக்கும் நமது சொந்தங்கள் அனைவருக்கும் பங்குஉண்டு.. இயக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு குறிபிட்ட தலைவரையும் சார்ந்து இல்லாமல், சுயமாக முடிவெடுக்கும் திறமையுடன் முழுக்க முழுக்க நமது மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படவேண்டும். இதை வழிநடத்தும் குழுவும் ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது இரண்டாண்டிற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும், இது அமைப்பின் அனைத்து உறுபினர்களும் செயற்குழுவில் பங்கேற்க முடியம் என்ற நம்பிக்கையை வளர்க்கும்.. இயக்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், செயல்திட்டமும் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகவே இருக்க வேண்டும்.இன்று பலரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி கிடக்கும் நமது வலுவிழந்த பழைய சங்கமாகவோ, பேரவையாகவோ இல்லாமல் கடல்கடந்து உலகெங்கும் இருக்கும் எம்மக்களை இணைக்கும் ஒரு இளைஞர் பேரியக்கமாக விளங்கவேண்டும்..

இயக்கத்தின் பெயரும், கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதையாக இருக்கவேண்டும்.. ஒவ்வொரு 3 ஆண்டுக்கான கொள்கைகளுடன் இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நமது வளர்ச்சிபாதையை இன்றே நிர்ணயித்து செயல்படவேண்டும்.. நாளைய வரலாற்றில் இந்த பேரியக்கத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை இதன் 50 வது ஆண்டுவிழாவில் நமது நாளைய உறுப்பினர்கள் அறிந்திருக்கவேண்டும்.. குழுமத்தின் உறுப்பினர்கள் மட்டுமில்லாது,அனைத்துலக நமது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு விழாவாக மாறவேண்டும்.இதற்க்கு காலம் தான் பதில் சொல்லும் என்றாலும்.. தனிநபர் குரல் என்பது அவனை மட்டுமே உயர்த்திகாட்டும்..ஒரு இயக்கத்தின் குரல் அவன் சார்ந்த சமூகத்தையே புரட்டிபோடும்…புரட்சி..!

By

Ganesh Konar

Advertisements

Posted in Uncategorized | Tagged: , , , , , | 49 Comments »